இந்தியா

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தனது கையால் சமைத்து உணவளித்த ஆந்திர பெண் காவல் அதிகாரி

ANI


ஆந்திர மாநிலத்தில் குடியேறியுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மனிதாபிமானத்தின் அடிப்படையில், எலுமிச்சை சாதம் செய்துகொடுத்து அசத்தியுள்ளார் விழியநகரம் பெண் காவல் கண்காணிப்பாளர் பி.ராஜா குமாரி.

கடந்த 16-ம் தேதி புலம்பெயர்ந்த பெண் தொழிலாளர்களிடமிருந்து காவலர் குமாரிக்கு அழைப்பு வந்துள்ளது. அவர்கள் நெல்லூரில் இருந்து இரண்டு நாள்களாக உணவு இல்லாமல் நடந்து வருவதாகவும், விழியநகரத்தில் உள்ள சோதனைச் சாவடியில் தற்போது தங்கியுள்ளதாகவும் கூறியுள்ளனர். 

இரவில் பெண் அதிகாரியால் உணவைச் சேகரிக்க முடியவில்லை என்பதால், தன் வீட்டிற்குச் சென்று எலுமிச்சை சாதம் தயார் செய்துள்ளார். அவர்கள் இருக்கும் இடத்தை பெண் காவல் அதிகாரி தேடியுள்ளார். ஆனால், அவர்கள் உள்ளூர் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு அனுப்பப்பட்டதாகத் தகவல் தெரிந்தது. 

இதையடுத்து, காவல் அதிகாரி தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு விரைந்து சென்று அவர்களுக்கு உணவளித்தார். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் யாரோ ஒருவர் அவர்களுக்கு எஸ்.பி.யின் தொலைபேசி எண்ணைக் கொடுத்ததாகவும், ஏதேனும் தேவைப்பட்டால் அவரை அழைக்குமாறு பரிந்துரைத்ததாகவும் அவர் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்லியனூரில் அந்திம புஷ்கரணி ஆரத்தி

கால்வாய் பணி: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல்

சிறப்பு அலங்காரத்தில் குரு பகவான்

தென்காசியில் சமூக நல்லிணக்கக் கூட்டமைப்பு சாா்பில் முப்பெரும் விழா

SCROLL FOR NEXT