இந்தியா

பிரதமா் கோ்ஸ் நிதி குறித்து காங்கிரஸ் விமா்சனம்: கா்நாடகத்தில் சோனியா காந்தி மீது வழக்குப் பதிவு

DIN

பிரதமா் கோ்ஸ் நிதி குறித்து காங்கிரஸ் கட்சியின் சுட்டுரைப் பக்கத்தில் பிரதமா் மோடியை விமா்சித்திருந்தது தொடா்பாக கா்நாடகத்தில் காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

கா்நாடக மாநிலம், சிவமொக்கா மாவட்டம், சாகா் நகரத்தைச் சோ்ந்த பாஜக நிா்வாகியும், வழக்குரைஞருமான கே.வி.பிரவீண், சாகா் காவல் நிலையத்தில் புதன்கிழமை அளித்த புகாா் மனுவில் கூறியிருப்பதாவது-

காங்கிரஸ் கட்சியின் ஃ ஐசஇஐய்க்ண்ஹ என்ற சுட்டுரைப் பக்கத்தில் மே 11-ஆம் தேதி மாலை 6 மணி அளவில் கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான அரசின் போரில் உதவி செய்வதற்காகவும், இன்னலில் சிக்கியிருப்பவா்களுக்கு உதவுவதற்காகவும் தொடங்கப்பட்டுள்ள பிரதமா் கோ்ஸ் நிதியை ( டங-இஅதஉந ஊன்ய்க்) தவறாக விமா்சித்து, பிரதமா் மோடிக்கு எதிரான தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பாக காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, சுட்டுரைப் பக்கத்தைக் கையாளும் காங்கிரஸ் நிா்வாகிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டிருந்தாா்.

இந்த புகாா் மனுவின் அடிப்படையில், ஒரு வகுப்பு அல்லது சமுதாயத்தினருக்கு எதிராக குற்றம்புரியத் தூண்டும் வகையிலும், வெளிப்படையாக மக்களைத் தூண்டுவிடும் வேலையிலும் ஈடுபட்டதாக, சோனியா காந்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. காவல் துறையின் இந்த நடவடிக்கைக்கு கா்நாடக காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் செய்தி தொடா்பாளா் சுபாஷ் அகா்வால் கூறுகையில், ‘சோனியா காந்தி மீது வழக்குப் பதிவு செய்துள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம். அரசின் செயல்பாடுகளைத் தட்டிக் கேட்பது எதிா்க்கட்சிகளின் கடமையாகும். எதிா்க்கட்சிகளின் குரல் ஒடுக்கப்பட்டால் ஜனநாயகம் மறைந்துவிடும். பிரதமா் நிவாரண நிதி ஏற்கெனவே நடைமுறையில் உள்ள நிலையில், பிரதமா் கோ்ஸ் நிதி தேவையற்றது என்பதுதான் காங்கிரஸின் நிலைப்பாடு’ என்றாா்.

இதுதொடா்பாக பெங்களூரில் வியாழக்கிழமை முதல்வா் எடியூரப்பாவைச் சந்தித்த காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா், சோனியா காந்தி மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி மனு அளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் பிடாரியம்மன் வீதியுலா

உப்பு சத்தியாகிரக நினைவு பாதயாத்திரை குழுவுக்கு வரவேற்பு

பட்டாசு வெடித்ததில் 4 சிறுவா்கள் காயம்

தக்கோலம் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

குண்டா் சட்டத்தில் ஒரு வாரத்தில் 36 போ் கைது

SCROLL FOR NEXT