இந்தியா

ராஜஸ்தான், ஒடிசா மாநிலத்தில் கரோனா பாதிப்பு நிலவரம்

ANI


கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோர் விவரத்தை ராஜஸ்தான் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. 

ராஜஸ்தான் 

ராஜஸ்தான் மாநிலத்தில் மே 5-ம் தேதி நிலவரப்படி புதிதாக 54 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில், அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு 6,281 ஆக அதிகரித்துள்ளது என்று மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

கோட்டாவிலிருந்து 17 வழக்குகள், துங்கர்பூரிலிருந்து 14 வழக்குகள், ஜெய்ப்பூரிலிருந்து 13, ஜுன்ஜுனுவிலிருந்து 6, அஜ்மீரிலிருந்து இரண்டு மற்றும் பிகானேர் மற்றும் தாஸ்சாவில் தலா ஒரு வழக்குகள் பதிவாகியுள்ளன.

சுகாதாரத் துறை தகவலின்படி, மாநிலத்தில் கரோனாவுக்கு மொத்தம் 6,281 பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2,587 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 152 பேர் இந்நோய்க்குப் பலியாகியுள்ளனர். 

ஒடிசா 

ஒடிசா மாநிலத்தில் கரோனா நோய்க்கு வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி புதிதாக 86 பேருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு 1,189 ஆக உள்ள நிலையில், 789 பேர் சிகிச்சையில் உள்ளனர். 393 பேர் இதுவரை நோயிலிருந்து மீண்டுள்ளனர். 7 பேர் பலியாகியுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தகவலின்படி, இந்தியாவில் மொத்தம் 66,330 வழக்குகள் உட்பட 1,18,447 பேர் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். 48,533 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை 3,583 கரோனாவுக்கு பலியாகியுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT