முகப்பு
இந்தியா

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பின் முக்கிய அம்சங்கள்!

வங்கிக் கடன்களுக்கான ரெப்போ மற்றும் ரிவர்ஸ் ரெப்போ விகிதங்களைக் குறைத்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:40 PM
பகிர்:

வங்கிக் கடன்களுக்கான ரெப்போ மற்றும் ரிவர்ஸ் ரெப்போ விகிதங்களைக் குறைத்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்தார்.

கரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் நான்காவது முறையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார்.

ஊரடங்கு காரணமாக பொருளாதாரம் பெரும் நெருக்கடியில் சிக்கியிருக்கும் நிலையில், பல முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.

செய்தியாளர்களிடம் பேசிய சக்திகாந்த தாஸ் அறிவித்த முக்கிய அறிவிப்புகளில் சில..

அடுத்த சில மாதங்களில் பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை உயரலாம் என்று ரிசர்வ் வங்கி அச்சம் கொள்கிறது.

ரெப்போ வட்டி விகிதம் 4.40% இருந்து  4% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் 3.35% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. (வங்கிகள் தங்கள் கையில் இருக்கும் தொகையை ரிசர்வ் வங்கியில் வைத்திருக்கும் போது அதற்கு வழங்கப்படும் வட்டி ரிசர்வ் ரெப்போ வட்டி)

சந்தைப் பொருளாதாரத்தை மேற்கொள்ள ரிசர்வ் வங்கி கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

தொழிற்துறை உற்பத்தி மார்ச் மாதத்தில் 17% குறைந்துள்ளது.

உள்நாட்டு உற்பத்தி நடப்பாண்டில் கடும் வீழ்ச்சியை சந்திக்கும். உலகம் முழுவதும் பொருளாதார நடவடிக்கைகள் முடங்கியுள்ளன.

இந்திய பொருளாதாரத்துக்கு முக்கியப் பங்கு அளிக்கும் மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.

ஜிடிபி சற்று வளர்ச்சியடையக் கூட நடப்பு நிதியாண்டில் சூழல் இல்லை.

நாட்டில் மானாவரி சாகுபடி செய்யும் நிலத்தின் பரப்பளவு 44% உயர்ந்துள்ளது.

அன்னியச் செலாவணி கையிருப்பு 487 பில்லியன் டாலர் அளவுக்கு உள்ளது.

நடப்பு நிதி ஆண்டின் பாதியில் பணவீக்கம் குறையும் என நம்பிக்கை உள்ளது.

வங்கிக் கடன்களுக்கான தவணை செலுத்துவதற்கான சலுகை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு சலுகை வட்டியில் கடன் வழங்கப்படும் என்று சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →