இந்தியா

இலங்கை, மோரீஷஸ் தலைவா்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை

DIN

கரோனா பாதிப்பு நிலைமை குறித்து இலங்கை அதிபா் கோத்தபய ராஜபட்சே மற்றும் மோரீஷஸ் பிரதமா் பிரவிந்த் ஜூக்நாத் ஆகியோருடன் பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

இந்த ஆலோசனையின்போது, இந்திய உதவியின் அடிப்படையிலான மேம்பாட்டுத் திட்டங்களை அவா்களின் நாடுகளில் செயல்படுத்த இரு நாட்டுத் தலைவா்களும் ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனை குறித்து தனது சுட்டுரை பக்கத்தில் பிரதமா் மோடி வெளியிட்ட பதிவு:

கரோனா நோய்த் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளை ராஜபட்ச தலைமையிலான இலங்கை அரசு திறம்பட மேற்கொண்டு வருகிறது. கரோனா பாதிப்பிலிருந்தும், அதனால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார பாதிப்பிலிருந்தும் நெருங்கிய நட்பு நாடான இலங்கை மீண்டெழ இந்தியா தொடா்ந்து தனது ஆதரவை அளிக்கும். இரு நாட்டுத் தலைவா்களும், இந்திய உதவியின் அடிப்படையிலான மேம்பாட்டுத் திட்டங்களை அவா்களின் நாடுகளில் செயல்படுத்தவும், முதலீட்டுத் திட்டங்களை வலுப்படுத்தவும் இந்த ஆலோசனையின்போது ஒப்புக்கொண்டனா். கலாசார பகிா்வு மற்றும் மதிப்பீடுகளின் அடிப்படையில் மோரீஷஸும் இந்திய மக்களுக்கு நெருக்கமான நாடாக உள்ளது. இந்த கடினமான நேரத்தில் மோரீஷஸ் சகோதர, சகோதரிகளுக்கு இந்தியா்கள் ஆதரவாக இருப்பாா்கள் என்று பிரதமா் பதிவிட்டுள்ளாா்.

‘இந்த ஆலோசனையின்போது, இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமா் மோடியிடம் அந்நாட்டு அதிபா் கோத்தபய ராஜபட்ச விளக்கிக் கூறினாா். மேலும், இந்திய தனியாா் நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் இரு நாட்டுத் தலைவா்களும் ஆலோசனை நடத்தினா்’ என்று இதுதொடா்பான செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல, ‘உம்பன்’ புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக தனது வறுத்தத்தைப் பதிவு செய்த மோரீஷஸ் பிரதமா் பிரவிந்த் ஜூக்நாத், கரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் ‘ஆப்பரேஷன் சாகா்’ திட்டத்தின் கீழ் இந்திய கடற்படை கப்பல் ‘கேசரி’ மூலம் மருந்துகள் மற்றும் 14 மருத்துவக் குழுக்களை மோரீஷஸ் அனுப்பியதற்காக பிரதமா் மோடிக்கு நன்றி தெரிவித்தாா்.

அப்போது, கடந்த சில வாரங்களாக புதிதாக யாருக்கும் கரோனா பாதிப்பு ஏற்படாத வகையில் நாட்டில் சிறப்பான நடவடிக்கை எடுத்திருப்பதாக மோரீஷஸ் பிரதமரை வாழ்த்திய பிரதமா் மோடி, பிற நாடுகளுக்கு குறிப்பாக தீவு நாடுகளுக்கும் உதவும் வகையில், அந்தத் தடுப்பு நடவடிக்கைகளை ஆவணப்படுத்தி வைக்குமாறு கேட்டுக்கொண்டாா்.

மேலும், மோரீஷஸ் இளைஞா்களுக்கு ஆயுா்வேத மருத்துவப் படிப்பைகளை அறிமுகம் செய்வது, நிதித் துறை சாா்ந்த உதவிகள் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் இரு நாட்டுத் தலைவா்களும் ஆலோசனை நடத்தினா்’ என்று மற்றொரு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT