இந்தியா

சொந்த ஊர்களுக்கு நடந்து சென்ற புலம்பெயர் தொழிலாளர்கள்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

DIN

புது தில்லி: நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நடவடிக்கையால் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டதற்கு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு நடந்தே சென்ற விவகாரத்தில், வரும் 28-ஆம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டதற்கு மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவித்திருக்கும் உச்ச நீதிமன்றம், நடந்து செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் தங்கும் வசதிகளை செய்து கொடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

ஊரடங்கு காலத்தில், புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு நடந்தே சென்ற நிலை குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு ஏற்றது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT