இந்தியா

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பரிசோதனை நிறுத்தி வைப்பு: உலக சுகாதார நிறுவனம் தகவல்

DIN

கரோனா நோயாளிகளுக்கு பயன்படும் மலேரியா தடுப்பு மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பரிசோதனையை உலக சுகாதார நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. 

உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயசஸ் தெரிவித்தார்.

கரோனா வைரஸ் தொற்றுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் எனும் மலேரியா தடுப்பு மருந்து பயன்படுத்தப்படுகிறது. தற்போதைய சூழ்நிலையில், கரோனா தொற்றுநோயைத் தடுக்க இந்த மருந்து உதவும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். 

இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பரிசோதனையை உலக சுகாதார நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. 

அதே நேரத்தில் தரவுகளின் அடிப்படையில், பாதுகாப்பு கண்காணிப்பு வாரியம் இதனை மதிப்பாய்வு செய்கிறது.

மேலும், கரோனா வைரஸிற்கான சிகிச்சை மற்றும் மருந்துகள் குறித்த பரிசோதனைகளை நடத்துவதற்கான சர்வதேச முயற்சியில் இறங்கியுள்ளதாக டெட்ரோஸ் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5-ஆம் கட்ட தேர்தல்: ஜனநாயகக் கடமையாற்றிய சாமானிய மக்கள்!

வாக்குச்சாவடியில் வாக்காளர்களுக்கு பணம்? திரிணமூல் மீது பாஜக குற்றச்சாட்டு

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்துக்கு தமிழக அரசு அனுமதி

ரோஹித் சர்மாவின் குற்றச்சாட்டை மறுத்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ்!

தில்லியில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT