முகப்பு
இந்தியா

ஒடிசாவில் 1,593-ஐ எட்டியது கரோனா பாதிப்பு: புதிதாக 76 பேருக்குத் தொற்று

ஒடிசாவில் மேலும் 76 பேருக்குப் புதிதாக கரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ள நிலையில் அந்த மாநிலத்தில் பாதித்தோர் எண்ணிக்கை 1,593 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:42 PM
பகிர்:

புவனேஸ்வர்: ஒடிசாவில் மேலும் 76 பேருக்குப் புதிதாக கரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ள நிலையில் அந்த மாநிலத்தில் பாதித்தோர் எண்ணிக்கை 1,593 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, மொத்த பாதிப்புகளில் 853 பேர் தற்போது மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர். சிகிச்சைக்குப் பின்னர் 733 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை ஏழு இறப்புகள் பதிவாகியுள்ளன. 

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கூற்றுப்படி, இந்தியாவில் மொத்தம்  1,51,767 பேர் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 83,004 பேர் சிகிச்சையில் உள்ளனர். 64,425 பேர் நோயிலிருந்து குணமடைந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் 4,337 பேர் பலியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.