இந்தியா

சிலிகுரியில் கரோனா பாதித்த பெண்ணுக்கு ஆரோக்கியமான குழந்தைப் பிறந்தது

மேற்கு வங்கம், சிலிகுரியில் உள்ள வட வங்காள மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கரோனா பாதித்த பெண்ணுக்கு செவ்வாய்க்கிழமை ஆரோக்கியமான பெண் குழந்தை பிறந்துள்ளது. 

ANI

மேற்கு வங்கம், சிலிகுரியில் உள்ள வட வங்காள மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கரோனா பாதித்த பெண்ணுக்கு செவ்வாய்க்கிழமை ஆரோக்கியமான பெண் குழந்தை பிறந்துள்ளது. 

இதுகுறித்து மகப்பேறு மருத்துவத்துறைத் தலைவர் டாக்டர் சந்தீப் சென்குப்தா கூறுகையில், 

கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் பெண் ஒருவர் அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். தற்போது குழந்தை ஆரோக்கியமாக உள்ளது. 

ஆரம்பத்தில் கரோனா தொற்று நோயைக் கையாளும் சுகாதாரப் பணியாளர்களிடம் ஒரு பயம் இருந்தது. தற்போது அதை எதிர்த்துப் போராடும் துணிவு வந்துவிட்டது. மருத்துவ குழுவினருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார். 

தாய் மற்றும் குழந்தை இருவரும் தற்போது நலமாக இருக்கிறார்கள். தேவைப்பட்டால், தொற்று பாதித்த பெண்ணை கரோனா மருத்துவமனைக்கு மாற்றுவோம் என்று அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து! பதைபதைக்கும் காணொலி!

ஆஸ்திரேலிய போண்டி கடற்கரை தாக்குதல்: தந்தையிடம் துப்பாக்கி பயிற்சி பெற்ற மகன்!

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

SCROLL FOR NEXT