முகப்பு
இந்தியா

ஆந்திரத்தில் மேலும் 134 பேருக்கு கரோனா தொற்று: ஒருவர் பலி

ஆந்திர மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்றுக்கு ஒருவர் பலியாகியுள்ளதை அடுத்து, அங்குப் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:42 PM
பகிர்:


ஆந்திர மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்றுக்கு ஒருவர் பலியாகியுள்ளதை அடுத்து, அங்குப் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது. 

சுகாதாரத்துறை தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 134 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில், அந்த மாநிலத்தில் பாதித்தோர் எண்ணிக்கை 3,117 ஆக அதிகரித்துள்ளது. 

புதன்கிழமை காலை 9 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் பதிவான புதிய வழக்குகளில், ஒன்பது பேர் சென்னையில் உள்ள கோயம்பேடு சந்தையில் இருந்தவர்கள் என்று தகவல் தெரிவித்துள்ளது.

இதுவரை 9,664 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. மற்ற மாநிலங்களைச் சேர்ந்த 48 பேர் உட்பட பல்வேறு மருத்துவமனைகளில் இருந்து 1,913 பேர் நோயிலிருந்து மீண்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். தற்போது 816 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.