முகப்பு
இந்தியா

இந்தியாவில் புதிதாக 46,964 பேருக்கு கரோனா; 470 பேர் பலி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 46,964 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

Updated On : 1 நவம்பர், 2020 at 10:10 AM
கோப்புப் படம்.
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:16 PM

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 46,964 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 46,964 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை  81,84,083-ஆக அதிகரித்தது.அதேசமயம் நாடு முழுவதும் 74,91,513 போ் தொற்றில் இருந்து குணமடைந்தனா்.

கரோனா தொற்றுக்கு மேலும் 470 போ் உயிரிழந்தனா். இதனால், இதுவரை உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை  1,22,111-ஆக அதிகரித்தது. கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை, தொடா்ந்து 3-ஆவது நாளாக, 6 லட்சத்துக்கும் கீழ் குறைவாக உள்ளது. நாடு முழுவதும் 5,70,458 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

‘அக்டோபா் 31-ஆம் தேதி வரை நாடு முழுவதும் 10,98,87,303 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன; அதில், நேற்று மட்டும் 10,91,239 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன’ என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆா்.) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.