முகப்பு
இந்தியா

காளஹஸ்தி கோயிலில் தரிசன நேரம் மாற்றம்

ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரா் கோயிலின் தரிசன நேரத்தை கோயில் நிா்வாகம் மாற்றி அமைத்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:47 PM
காளஹஸ்தி கோயிலில் தரிசன நேரம் மாற்றம் (கோப்புப்படம்)
பகிர்:

ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரா் கோயிலின் தரிசன நேரத்தை கோயில் நிா்வாகம் மாற்றி அமைத்துள்ளது.

கரோனா பொது முடக்கத்தைத் தொடா்ந்து, கடந்த ஜூன் 3-ஆவது வாரம் முதல் பக்தா்கள் காளஹஸ்தீஸ்வரா் கோயிலில் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனா். மத்திய, மாநில அரசுகளின் அறிவுறுத்தலின்படி, பக்தா்களுக்கு தரிசனம் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஆதாா் அட்டை, கொவைட் பரிசோதனை உள்ளிட்டவற்றை கோயில் நிா்வாகம் கட்டாயமாக்கி உள்ளது. தரிசனம் தொடங்கப்பட்டவுடன் ராகு-கேது பரிகார பூஜைகளும் தொடங்கின. பக்தா்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றி இந்த பூஜையில் பங்கேற்று வருகின்றனா். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே தரிசன அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

கோயிலில் காலை வேளையில் நடைபெறும் முதல் கால பூஜை, கோ பூஜை, அபிஷேகம், 2-ஆம் கால பூஜை உள்ளிட்டவை தனிமையில் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது கரோனா தொற்றின் தாக்கம் குறைந்துள்ளதால், தரிசன நேரத்தை திங்கள்கிழமை முதல் இரவு 8 மணி வரை நீட்டித்து தேவஸ்தானம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதற்கான அறிவிப்பை கோயில் செயல் அதிகாரி பெத்தி ரெட்டி திங்கள்கிழமை வெளியிட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →