முகப்பு
இந்தியா

உ.பி.யில் சாலை விபத்து:  6 பேர் பலி; 9 பேர் காயம்

உத்தரப்பிரதேச மாநிலயம் பஹ்ரைச் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மீது வேன் மோதியதில், அதில் இருந்த 6 பேர் பலியாகினர். 9 பேர் காயமடைந்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
உ.பி.யில் சாலை விபத்து:  6 பேர் பலி; 9 பேர் காயம்
பகிர்:


பஹ்ரைச்: உத்தரப்பிரதேச மாநிலயம் பஹ்ரைச் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மீது வேன் மோதியதில், அதில் இருந்த 6 பேர் பலியாகினர். 9 பேர் காயமடைந்தனர்.

இது குறித்து காவல்துறை கண்காணிப்பாளர் துபே வழக்குப் பதிவு செய்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த வேனில் 16 பேர் பயணம் செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

விபத்தில் சிக்கியவர்கள், லஷ்மிபுரைச் சேர்ந்தவர்கள் என்பதும், கிச்சௌசா தர்காவுக்குச் சென்று திரும்பியபோது 
ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் விபத்தில் சிக்கியதும் தெரிய வந்துள்ளது.

விபத்தில் சிக்கியவர்களை காவல்துறையினர் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போது, அதில் 6 பேர் உயிரிழந்துவிட்டனர் என்றும் 9 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →