தனியார் தொலைக்காட்சி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி 
இந்தியா

பெண் காவலரைத் தாக்கியதாக அர்னாப் கோஸ்வாமி மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

மகளிர் பெண் காவலரைத் தாக்கியதாக தனியார் தொலைக்காட்சி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

DIN

மகளிர் பெண் காவலரைத் தாக்கியதாக தனியார் தொலைக்காட்சி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டு மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த கட்டட வடிவமைப்பாளரை தற்கொலைக்குத் தூண்டியதாக ஊடகவியலாளரும், தனியார் தொலைகாட்சியின் ஆசிரியருமான அர்னாப் கோஸ்வாமி மீது குற்றம் சாட்டப்பட்டது. தற்காலிகமாக அப்போது முடிக்கப்பட்ட வழக்கு தற்போது மகாராஷ்டிர அரசின் உத்தரவின் பேரில், சிபிஐ மீண்டும் வழக்கின் விசாரணையைத் தொடங்கியுள்ளது. 

இது தொடர்பாக மும்பை காவல்துறையினர் அர்னாப் கோஸ்வாமியை புதன்கிழமை கைது செய்துள்ளனர். இதற்கு பாஜக தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அவரது இல்லத்தில் அவரைக் கைது செய்யும் போது பெண் காவலரை அவர் தாக்கியதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதனையடுத்து பணியில் உள்ள காவலரைத் தாக்கியதாகக் குற்றம்சாட்டி அவர் மீது மகாராஷ்டிர காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பவானியில் 300 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

மானாமதுரை நகா் காங்கிரஸ் தலைவா் நியமனம்

பண்ணாரி அம்மன் கோயிலில் குவிந்த பக்தா்கள்

அறச்சலூா் ஓடாநிலையில் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா

ஆடிப்பெருக்கு: பவானிசாகா் அணைப் பூங்காவில் குழந்தைகள், பெண்கள் கொண்டாட்டம்

SCROLL FOR NEXT