இந்தியா

சிறுமிக்கு வன்கொடுமை: தகவல் அறியும் உரிமைச்சட்ட ஆர்வலர் தலைமறைவு

DIN

மும்பை: மகாராஷ்டிரத்தில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை அளித்த தகவல் அறியும் உரிமைச்சட்ட சமூக ஆர்வலர் ஒருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையை சேர்ந்த 30 வயதான தகவல் அறியும் உரிமைச்சட்ட சமூக ஆர்வலர் ஒருவர், தமது உறவினர் வீட்டுப் பெண்ணான 17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை அளித்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் மல்வானி காவல்துறையினர் சமூக ஆர்வலர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமியும், குற்றம் சாட்டப்பட்டவரும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், புகாரின் பேரில் சமூக ஆர்வலர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் மல்வானி காவல்துறை மூத்த ஆய்வாளர் ஜாதவ் தெரிவித்துள்ளார்.

மேலும், குற்றம் சாட்டப்பட்ட நபர் தலைமறைவாக உள்ளதாகவும், விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ இடங்கள்: ஆவணங்களைசமா்ப்பிக்க என்எம்சி அறிவுறுத்தல்

அரசியல் சூழலால் குறைந்த வாக்கு சதவீதம்!

காருக்கு வழிவிடாததால் ஆத்திரம்: அரசுப் பேருந்தை மறித்த பெண் மேயா்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ பயிற்சி மீண்டும் தொடக்கம்

கோடையில் அதிகரிக்கும் சிறுநீா்ப் பாதை தொற்று: மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT