முகப்பு
இந்தியா

அவசர ஊர்திக்காக வாகன நெரிசலை சரிசெய்து 2 கி.மீ. ஓடிய காவலர்

ஆந்திர மாநிலத்தில் அவசர ஊர்திக்கு வழியை ஏற்படுத்துவதற்காக 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓடி வாகன நெரிசலை சரிசெய்த காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Updated On : 5 நவம்பர், 2020 at 1:44 PM
அவசர ஊர்திக்காக 2 கி.மீ. ஓடி வாகன நெரிசலை சரிசெய்த காவலர் (கோப்புப்படம்)
பகிர்:

ஆந்திரத்தில் அவசர ஊர்திக்கு வழியை ஏற்படுத்துவதற்காக 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓடி வாகன நெரிசலை சரிசெய்த காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

ஆந்திர மாநிலத்தின் ஹைதராபாத் பகுதியில் நேற்று (புதன்கிழமை) மாலை வாகன நெரிசலுக்கு மத்தியில் செல்வதற்கு வழியின்றி அவசர ஊர்தி காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

அப்போது அந்தப் பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலர் பாலாஜி என்பவர் அவசர ஊர்திக்கு வழியை ஏற்படுத்தும் வகையில் சாலையில் வாகன நெரிசலை சரிசெய்து வழியை ஏற்படுத்தினார்.

Advertisement

இதனைத்தொடர்ந்து ஜி.பி.ஓ. சந்திப்பு பகுதியிலிருந்து கோட்டி பகுதி வரை சுமார் 2 கிலோமீட்டர் தூரம் வாகன நெரிசலை சரிசெய்துகொண்டு ஓடினார்.

இதனை அவசர ஊர்தி வாகனத்தில் இருந்த நபர் விடியோ எடுத்துள்ளார். அவசர ஊர்தி வாகனத்திற்கு 2 கிலோமீட்டர் தூரம் ஓடி வழியை ஏற்படுத்திய போக்குவரத்துக் காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.