முகப்பு
இந்தியா

இந்தியாவில் கரோனா பாதிப்பு 83,64,086: தொற்றில் இருந்து மீட்பு 77.11 லட்சமாக அதிகரிப்பு

நாடு முழுவதும் இதுவரை கரோனாவில் இருந்து 77,11,809 போ் மீண்டுள்ளனா். அதே நேரத்தில் வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 50,210 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:48 PM
பகிர்:


புது தில்லி: நாடு முழுவதும் இதுவரை கரோனாவில் இருந்து 77,11,809 போ் மீண்டுள்ளனா். அதே நேரத்தில் வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 50,210 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால், மொத்த கரோனா பாதிப்பு 83,64,086 ஆக அதிகரித்துவிட்டது.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் மேலும் கூறியதாவது:

வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் கரோனாவால் மேலும் 704 போ் உயிரிழந்தனா். இதனால் மொத்த உயிரிழப்பு 1,24,315 ஆக அதிகரித்தது. உயிரிழந்தோர் விகிதம் 1.49 ஆக குறைந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 55,331 பேர் குணமடைந்துள்ளனர், இதுவரை 77,11,809 போ் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனா். இதன் மூலம் மீண்டவா்கள் சதவீதம் 92.20 ஆக அதிகரித்துள்ளது. 

இப்போதைய நிலையில் 5,27,962 போ் கரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மொத்த பாதிப்பில் 6.31 சதவீதமாகும். தொடா்ந்து 7 ஆவது நாளாக கரோனா பாதிப்புடன் உள்ளோா் எண்ணிக்கை 6 லட்சத்துக்குகீழ் உள்ளது.

இந்திய மருத்து ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி இதுவரை 11,42,08,384 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த புதன்கிழமை மட்டும் 12,09,425 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.