முகப்பு
இந்தியா

மகாராஷ்டிர ரசாயன தொழிற்சாலையில் வெடிவிபத்து: 2 பேர் பலி, 6 பேர் காயம்

மகாராஷ்டிரத்தின் ராய்கட் மாவட்டத்தில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இரண்டு பேர் பலியாகினர், 6 பேர் காயமடைந்தனர் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

Updated On : 5 நவம்பர், 2020 at 12:37 PM
Two killed, six injured in explosion at chemical factory in Maharashtra's Raigad district
பகிர்:

மகாராஷ்டிரத்தின் ராய்கட் மாவட்டத்தில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இரண்டு பேர் பலியாகினர், 6 பேர் காயமடைந்தனர் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

மும்பையிலிருந்து சுமார் 70 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கோபோலி நகரத்தின் சஜ்கான் தொழிற்சாலை பகுதியில் உள்ள தொழிற்சாலையில் அதிகாலை 2.30 மணியளவில் இந்த வெடி விபத்து நிகழ்ந்துள்ளதாகவும், அதைத் தொடர்ந்து வளாகத்தில் தீ பரவியதாகவும் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். 

கோபோலி காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரி கூறுகையில், 

Advertisement

இந்த வெடிவிபத்தில் பெண் உள்பட இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயமடைந்தனர். தீயணைப்புத் துறையினரும், காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர் என்று அவர் கூறினார்.

காயமடைந்தவர்கள் கோபோலியில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார். அதிகாலை வரை தீயணைப்பு நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.