முகப்பு
இந்தியா

'தில்லியில் நவம்பர் 30 வரை பட்டாசுகளுக்குத் தடை'

தில்லியில் அனைத்துவிதமான பட்டாசுகளுக்கும் நாளை முதல் நவம்பர் 30-ஆம் தேதி வரை தடை விதிக்கப்படுவதாக தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:48 PM
தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியேந்திர ஜெயின் (கோப்புப்படம்)
பகிர்:

தில்லியில் அனைத்துவிதமான பட்டாசுகளுக்கும் நாளை முதல் நவம்பர் 30-ஆம் தேதி வரை தடை விதிக்கப்படுவதாக தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.

தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காற்று மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு பட்டாசுகள் வெடிப்பதைப் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று நேற்று (வியாழக்கிழமை) முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கேட்டுக்கொண்டதைக் குறிப்பிட்டார்.

அந்தவகையில் தில்லியில் அனைத்து விதமான பட்டாசுகளுக்கும் நவம்பர் 7 முதல் 30 ஆம் தேதி வரை தடை விதிக்கப்படுவதாகக் கூறினார்.

தில்லியில் கரோனா தொற்று மூன்றாவது அலை வீசுவதாகக் குறிப்பிட்ட அமைச்சர் சத்யேந்திர ஜெயின், மூன்றாம் கட்ட கரோனா பரவலால் பலர் பாதிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக மேலும் அவர் பேசியதாவது, ''மூன்றாம் கட்ட கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது வரை 7,231 பேருக்கு கரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனினும் தில்லியில் 8,572 கரோனா படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகளில் கூடுதலாக கரோனா படுக்கைகளை அதிகரித்து வருகிறோம். தனியார் மருத்துவமனைகளிலும் கரோனா படுக்கைகளை அதிகரிக்க அறிவுறுத்தியுள்ளோம்'' என்று சத்யேந்திர ஜெயின் தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →