முகப்பு
இந்தியா

குதிரை பேர அரசியல் செய்வது கமல்நாத்: ம.பி. முதல்வர்

மத்தியப் பிரதேசத்தில் குதிரை பேர அரசியலில் ஈடுபடுவது காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் என மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:49 PM
பகிர்:


மத்தியப் பிரதேசத்தில் குதிரை பேர அரசியலில் ஈடுபடுவது காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் என மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்ததாவது:

"பாஜக குதிரைப் பேரத்தில் ஈடுபடுவதாக காங்கிரஸ், கமல்நாத் மற்றும் திக்விஜய் சிங் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால், பாஜக யாரையும் அணுகவில்லை. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் பாஜகவில் இணைந்துள்ளனர். இதை கமல்நாத் செய்தால் தவறல்ல, யாரேனும் விருப்பப்பட்டு பாஜகவில் இணைந்தால் அது குதிரை பேரமா?

இன்றைக்கும் பாஜக எம்எல்ஏ-க்களை கமல்நாத் அழைத்துக் கொண்டிருக்கிறார். கமல்நாத் தான் குதிரை பேர அரசியலில் ஈடுபடுகிறார். அவரால் முடிந்ததை அவர் செய்யட்டும். ஆனால், பாஜக எம்எல்ஏ-க்கள் எங்கும் போகமாட்டார்கள். எங்களது தொண்டர்கள் கொள்கைக்காகவும், சித்தாந்தத்துக்காகவும் வேலை செய்பவர்கள்."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.