மகாராஷ்டிரத்தில் மேலும் 5,092 பேருக்கு கரோனா
மகாராஷ்டிரத்தில் புதிதாக 5,092 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:19 PM
மகாராஷ்டிரத்தில் புதிதாக 5,092 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாநிலத்தில் புதிதாக 5,092 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 17,19,858 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 8,232 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 110 பேர் பலியாகியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 45,240 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 15,77,322 பேர் குணமடைந்துள்ளனர். 96,372 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Advertisement