கேரளத்தில் புதிதாக 5,440 பேருக்கு கரோனா
கேரளத்தில் இன்று புதிதாக 5,440 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளத்தில் இன்று புதிதாக 5,440 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளத்தில் கரோனா வைரஸ் தொடர்பான இன்றைய விவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில், இன்று புதிதாக 5, 440 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,86,109ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவிலிருந்து இன்று ஒரே நாளில் 6,853 பேர் குணமடைந்துள்ளர். இதையடுத்து கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4,2,477 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், கரோனாவுக்கு இன்று மேலும் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
Advertisement
இதன்மூலம் பலியானோர் மொத்த எண்ணிக்கை 1,692 ஆக உயர்ந்துள்ளது. தற்போது நிலவரப்படி 83,261 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.