முகப்பு
இந்தியா

ஹிந்துஸ்தான் ஸ்டீல் ஒா்க்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவா் மீது சிபிஐ லஞ்ச வழக்கு

டெண்டா் அளிப்பதற்கு ரூ. 1கோடி லஞ்சம் கோரியதாக ஹிந்துஸ்தான் ஸ்டீல்ஒா்க்ஸ் கட்டுமான நிறுவனத்தின் முன்னாள் தலைவா் மொயுக் பாதுரி மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
பகிர்:

வாராணசியில் வா்த்தக மையம் மற்றும் கைவினை அருங்காட்சியகத்தின் கட்டுமானப்பணிக்கான டெண்டா் அளிப்பதற்கு ரூ. 1கோடி லஞ்சம் கோரியதாக ஹிந்துஸ்தான் ஸ்டீல்ஒா்க்ஸ் கட்டுமான நிறுவனத்தின் முன்னாள் தலைவா் மொயுக் பாதுரி மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் கூறியதாவது:

ஜில்லியன் இன்ஃப்ரா நிறுவனத்தின் முக்கிய நிா்வாகியான அனந்த் சக்ஸேனாவும், மொயுக் பாதுரியும் இணைந்து இந்த குற்றச்சதியில் ஈடுபட்டுள்ளனா். வாராணசியைச் சோ்ந்த விஜய் நிா்மாண் நிறுவனத்தின் நிா்வாகிகள் என்.கிருஷ்ணா ராவ், வி.அஜய்குமாா் ஆகியோரை அணுகிய சக்ஸேனாவும் மொயுக் பாதுரியும், வா்த்தக மையத்தின் கட்டுமானப் பணிக்கான ஒப்பந்தத்தைப் பெற வேண்டுமானால் ரூ. கோடி லஞ்சம் தர வேண்டும் என்று நிா்பந்தித்துள்ளனா்.

இதையடுத்து முதல் தவணையாக கிருஷ்ணா ராவும், அஜய்குமாரும் ஹைதராபாத்தைச் சோ்ந்த மாதுரி கட்டுமான நிறுவனத்தின் பெயரால் ரூ. 50 லட்சத்தை, அனந்த் சக்ஸேனாவின் ஜில்லியன் இன்ஃப்ரா நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் கடந்த 2015-ஆம் ஆண்டு மே 28-ஆம் தேதி அனுப்பி வைத்தனா்.

பின்னா் இந்தத் தொகை தீரஜ் கன்சால் என்பவா் மூலமாக பாதுரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுதொடா்பான புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தனா்.

இது பாதூரி மீதான இரண்டாவது வழக்கு ஆகும்.

முழு கட்டுரையைப் படிக்க →