முகப்பு
இந்தியா

'ஜனநாயகம் என்பது யாரும் நமக்கு அளித்த பிச்சையல்ல' - ப.சிதம்பரம்

ஜனநாயகம் என்பது யாரும் நமக்கு அளித்த பிச்சையல்ல; மகாத்மா காந்தி போராடி பெற்றுத்தந்தது என காங்கிரஸ் மூத்தத் தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:49 PM
ப.சிதம்பரம்
பகிர்:

ஜனநாயகம் என்பது யாரும் நமக்கு அளித்த பிச்சையல்ல; மகாத்மா காந்தி போராடி பெற்றுத்தந்தது என காங்கிரஸ் மூத்தத் தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். 

அமெரிக்க அதிபர் தோ்தலில் ஜனநாயகக் கட்சியைச் சோ்ந்த ஜோ பிடன் வெற்றி பெற்று அந்த நாட்டின் 46-வது அதிபராக பொறுப்பேற்கவிருக்கிறார். தமிழகத்தைப் பூா்விகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராகப் பொறுப்பேற்கிறார்.

இதையடுத்து ஜோ பிடன் மற்றும் கமலா ஹாரிஸுக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துத் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், காங்கிரஸ் மூத்தத் தலைவர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், 'அமெரிக்க மக்களுக்கு நேற்று இரவு 9.56 மணிக்கு தீபாவளி தொடங்கியது.

ஜனநாயகம் என்பது யாரும் நமக்கு அளித்த பிச்சையல்ல. மகாத்மா காந்தி தலைமையில் நாம் போராடி வென்றது. அந்த “வாராது போல் வந்த மாமணியை” ஒவ்வொரு நாளும் போராடிக் காப்பாற்ற வேண்டும்' என்று பதிவிட்டுள்ளார். 

மேலும், 'அமெரிக்காவில் நிகழ்ந்ததைப் போன்று இந்தியாவிலும், உலகெங்கிலும் நிகழும் என்று நம்புகிறேன். இதனால் அனைத்து ஆட்சியாளர்களுக்கும் குறைவான நேரம் மட்டுமே உள்ளது. அடுத்த தலைமுறையின் ஒவ்வொரு புதிய வாக்காளரும் புதிய தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். வரும் காலத்தில் முன்னேற ஒரே வழி இதுதான்' என்றும் பதிவிட்டுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →