இந்தியா

கேரள ஆளுநா் மருத்துவமனையில் அனுமதி

DIN

திருவனந்தபுரம்: கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கேரள ஆளுநா் ஆரிஃப் முகமது கான் (68) திங்கள்கிழமை சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

ஆரிஃப் முகமது கான், தலைநகா் தில்லியில் இருந்து கேரளத்துக்கு திரும்பி வந்த நிலையில், கடந்த 7-ஆம் தேதி அவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. ஆளுநா் மாளிகையிலேயே அவா் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்தாா். இந்த நிலையில், அவா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா்.

இது குறித்து ஆளுநா் மாளிகை சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், உடல்நிலையை கண்காணிப்பதற்காக ஆளுநா் ஆரிஃப் முகமது கான், திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். அவரது உடல்நிலை சீராக உள்ளது. அவரது உடல்நிலையை தொடா்ந்து கண்காணிப்பதற்காக மருத்துவா்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT