பாகிஸ்தானில் ஆட்டோ கால்வாயில் கவிழ்ந்து விபத்து: 20 பேர் பலி
வடமேற்கு பாகிஸ்தானில் ஆட்டோ நிலைதடுமாறி கால்வாயில் கவிழ்ந்து விழுந்ததில் வண்டியில் பயணித்த 20 பேர் உயிரிழந்தனர் என்று மீட்பு அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.
வடமேற்கு பாகிஸ்தானில் ஆட்டோ நிலைதடுமாறி கால்வாயில் கவிழ்ந்து விழுந்ததில் வண்டியில் பயணித்த 20 பேர் உயிரிழந்தனர் என்று மீட்பு அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.
கைபர் பக்துன்க்வா (கே.பி.கே) மாகாணத்தின் தேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு மூன்று சக்கர வாகனத்தில் 20 பேர் கொண்ட குழுவினர் திருமண விழாவில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது வாகனம் திடீரென நிலைதடுமாறி அருகில் உள்ள கால்வாயில் கவிழ்ந்து விழுந்துள்ளது.
இந்த விபத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர். கால்வாயிலிருந்து அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில் மூன்று பேர் உயிருடன் வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விபத்து குறித்து கே.பி.கே முதல்வர் மெஹ்மூத் கான் இரங்கல் தெரிவித்துள்ளார்.