FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,300 புள்ளிகள், நிஃப்டி 400 புள்ளிகள் சரிவு!

இந்திய பங்குச் சந்தை கடும் சரிவுடன் வர்த்தகம்...

கோப்புப்படம் - ANI
பகிர்:

இந்திய பங்குச்சந்தைகள் வியாழக்கிழமை காலை கடும் சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றது.

காலை பங்குச்சந்தைகள் தொடங்கும் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1364.67 புள்ளிகள், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 417.60 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகின.

இந்த நிலையில், காலை 9.45 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 1,309 புள்ளிகள் சரிந்து 71,820 புள்ளிகளாகவும், நிஃப்டி 50 417.35 புள்ளிகள் சரிந்து 22,262.05 ஆக வர்த்தகமாகி வருகின்றன.

Advertisement

Advertisement

சென்செக்ஸின் டிசிஎஸ், எச்சிஎல் பங்குகளை தவிர, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், எச்டிஎஃப்சி வங்கி, பாரதி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, இன்ஃபோசிஸ், பஜாஜ் பைனான்ஸ், மாருதி சுஸுகி, ஐடிசி உள்ளிட்ட அனைத்துப் பங்குகளும் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.

நிஃப்டி வங்கி, பைனான்ஸ், மிட்கேப், ஆட்டோ, ஐடி உள்ளிட்ட துறைகளின் பங்குகளும் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.

summary

Stock Market Plunge! Sensex Drops 1,300 Points, Nifty Falls 400 Points!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments