தாராவியில் வெறும் 2 பேருக்கு மட்டுமே கரோனா
ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் புதிதாக 2 பேருக்கு மட்டுமே கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:21 PM
ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் புதிதாக 2 பேருக்கு மட்டுமே கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதிதாக 2 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 3,608 ஆக உயர்ந்துள்ளது. அதில் 3,246 பேர் ஏற்கெனவே குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். தற்போதைய நிலையில் அங்கு 51 பேர் மட்டுமே இன்னும் கரோனாவுக்கான சிகிச்சையில் உள்ளனர்.