இந்தியா

தெலங்கானாவில் ஒரேநாளில் 1,015 பேர் பாதிப்பு: 1,716 பேர் குணம்

IANS

தெலங்கானாவில் இன்று புதிதாக 1,015 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில், அந்த நாட்டில் மொத்த பாதிப்பு 2.54 லட்சமாக உயர்ந்துள்ளது. 

நாட்டில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தெலங்கானாவில் இன்றைய பாதிப்பு நிலவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. 

அதன்படி, இன்று தெலங்கானாவில் புதிதாக 1,015 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பாதித்து 3 பேர் பலியாகியுள்ளதை அடுத்து, இறப்பு எண்ணிக்கை 1,393 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், ஒரேநாளில் தொற்று பாதித்து நோயிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,716 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து மீட்பு விகிதம் விகிதம் 92.65 சதவீதமாக உள்ளது. தற்போது மருத்துவமனையில் 17,323 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

கடந்த 24 மணி நேரத்தில் 40,603 கரோனா பரிசோதனைகள் மேற்கொண்ட நிலையில், இதுவரை மொத்தம் 47.70 லட்சம் சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT