இந்தியா

இந்தியாவில் மீண்டும் கால் பதிக்கும் முயற்சியில் ’பப்ஜி’

DIN

பாதுகாப்புக் காரணங்களுக்காக தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டு நிறுவனம் இந்தியாவில் தனது தரவு பாதுகாப்பு மையத்தை நிறுவ உள்ளதால் மீண்டும் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

உலக அளவில் பிரபலமாகியிருக்கும் ‘பப்ஜி’ விளையாட்டு தென்கொரிய நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு, நிா்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த பப்ஜி விளையாட்டின் செல்லிடபேசி பதிப்பை இந்தியாவில் அறிமுகம் செய்து நிா்வகிக்கும் உரிமத்தை சீனாவைச் சோ்ந்த டென்சென்ட் கேம்ஸ் நிறுவனம் பெற்றிருந்தது.

இந்த நிலையில், தேச பாதுகாப்பு மற்றும் தனி நபா் தகவல்கள் திருடப்படும் அச்சம் ஆகியவை காரணமாக பப்ஜி விளையாட்டு உள்பட சீனா தொடா்புடைய 118 செல்லிடபேசி செயலிகளுக்கு மத்திய அரசு கடந்த செப்டம்பா் மாதம் தடை விதித்தது.

இதனைத் தொடர்ந்து இந்தியப் பயனர்களுக்காக பப்ஜி மொபைல் நிறுவனம் பப்ஜி மொபைல் இந்தியா என்ற புதிய விளையாட்டை தொடங்கப்போவதாக அறிவித்துள்ளனர். 

குறிப்பாக இந்திய சந்தைக்கு என உருவாக்கப்படும் பப்ஜி மொபைல் இந்தியா என்ற புதிய விளையாட்டை தொடங்க தயாராகி வருவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கென தரவு பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளை உறுதி செய்வதற்காக இந்திய பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை சேமித்து வைக்கும் தரவு சேமிப்பு அமைப்புகளை இந்தியாவில் நிறுவ அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த புதிய பப்ஜி விளையாட்டுக்காக அந்நிறுவனம் ரூ.740 கோடி முதலீட்டை மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவித்துள்ளது. பப்ஜியின் இந்த அறிவிப்பு இந்தியாவின் பப்ஜி விளையாட்டு வீரர்களின் மத்தியில் உற்சாகத்தைக் கிளப்பியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

3,200 போதை மாத்திரைகள் பறிமுதல்: 6 போ் கைது

புழல் சிறையில் கைதியிடம் கைப்பேசி பறிமுதல்

ஆண்களிடம் ஆபாசமாக பேசி பணம் பறிப்பு: 5 போ் கைது

SCROLL FOR NEXT