முகப்பு
இந்தியா

சாத் பூஜை: நீர்நிலைகளில் மக்கள் ஒன்றுகூடி வழிபாடு நடத்தத் தடை

தில்லியில் சாத் பூஜைக்கு மக்கள் நீர்நிலைகளில் கூடி வழிபாடு நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:51 PM
தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியேந்திர ஜெயின் (கோப்புப்படம்)
பகிர்:

தில்லியில் சாத் பூஜைக்கு மக்கள் நீர்நிலைகளில் கூடி வழிபாடு நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.

சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வடமாநிலங்களில் சாத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

கரோனா பெருந்தொற்று பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக மக்கள் ஒன்றுகூடுவதைத் தடுக்கும் வகையில், இந்த ஆண்டு சாத் பூஜைக்கு நீர்நிலைகளில் வழிபாடு நடத்தத் தடை விதிக்கப்படுகிறது என்று கூறினார்.

தில்லியில் நேற்று (புதன்கிழமை) ஒருநாளில் மட்டும் 8,539 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 85 பேர் உயிரிழந்த நிலையில் 7,264 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தில்லியில் கரோனா இறப்பு விகிதம் 1.57 சதவிகிதமாக உள்ளது.

இதனால், மேலும் கரோனா பரவுவதைத் தடுக்கும் வகையில் சாத் பூஜைக்கு நீர்நிலைகளில் மக்கள் ஒன்றுகூடி வழிபாடு நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சத்தியேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.

மேலும், கரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளதால், தொற்று 'பாசிடிவ்' நபர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதாகக் குறிப்பிட்டார்.

எனினும் கடந்த 10 நாள்களாக கரோனா இறப்பு விகிதம் 1 சதவிகிதத்திற்கும் குறைவாக இருப்பதாகத் தெரிவித்தார். தொற்று பரவல் அடுத்தடுத்த வாரங்களில் குறையும் என்று எதிர்ப்பார்ப்பதாகவும் கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →