ஒடிசாவில் ஆயிரத்துக்குக் கீழ் குறைந்த ஒருநாள் கரோனா பாதிப்பு
ஒடிசாவில் கடந்த சில நாள்களுக்கு பின் ஆயிரத்துக்கும் கீழ் கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.
ஒடிசாவில் கடந்த சில நாள்களுக்கு பிறகு தினசரி பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகியுள்ளது என்று அந்த மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் ஒடிசாவில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக ஒடிசா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 986 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,05,986-ஆக அதிகரித்துள்ளது.
புதிதாகப் பாதிக்கப்பட்டதில், 986 பேர் தனிமைப்படுத்தப்பட்ட மையத்திலிருந்தும், 572 பேர் உள்ளூரிலும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கரோனா தொற்றால் 11,973 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை தொற்று பாதித்துக் குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 2,92,477-ஆக அதிகரித்துள்ளது.
புதிதாக 14 பேர் பலியானதால், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,483-ஆக அதிகரித்துள்ளது.
ஒடிசா மாநிலத்தில் இதுவரை 51.22 லட்சம் கரோனா பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 45,819 சோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்று சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.