ஏப்ரல் 5 முதல் சென்னை புறநகர் ரயில் சேவை சீராகும்!
சென்னை புறநகர் ரயில் சேவை பற்றி...
சென்னை எழும்பூர் ரயில் நிலைய பராமரிப்பு பணிகள் நிறைவுபெறும் நிலையில் இருப்பதால், திட்டமிட்டபடி வருகின்ற ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் புறநகர் ரயில் சேவைகள் சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு முதல் ரூ.820 கோடியில் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படும் 10, 11 ஆகிய நடைமேடைகள், தண்டவாளங்களில் கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி முதல் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் காரணமாக ஏப்ரல் 5 ஆம் தேதி வரை 5, 6 ஆகிய நடைமேடைகளில் இருந்து புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இதையடுத்து, கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு நிலையங்களுக்கு எழும்பூா் வழியாக நாள்தோறும் 204 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படும் நிலையில், பாதியாக குறைக்கப்பட்டது.
புறநகர் ரயில் சேவைகள் குறைப்பால் நாள்தோறும் வேலைக்குச் செல்லும் லட்சக்கணக்கான மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டும் பயனளிக்கவில்லை.
இந்த நிலையில், எழும்பூர் ரயில் நிலையத்தில் மேம்பால அடித்தளம் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதால், திட்டமிட்டபடி வருகின்ற ஞாயிற்றுக்கிழமை முதல் வழக்கமான அட்டவணைப்படி புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், மேம்பாலத்தில் நிழற்குடைகள் அமைக்கும் பணிகள் இரவு நேரத்தில் நடைபெறும் எனவும், சாய்வு பாலம் அமைக்கும் பணிகள் அடுத்த 15 நாட்களில் நிறைவு பெறும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Chennai Suburban Train Services to Normalize from April 5!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.