முகப்பு
இந்தியா

ஆப்கன் குண்டு வெடிப்பில் பத்திரிகையாளர் பலி 

தெற்கு ஆப்கானிஸ்தானில் வானொலி பத்திரிகையாளரின் வாகனத்தில் வைக்கப்பட்ட குண்டு வியாழக்கிழமை அதிகாலை வெடித்ததில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார் என்று மாகாண அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:51 PM
Official: Journalist killed in bomb blast in Afghanistan 
பகிர்:

தெற்கு ஆப்கானிஸ்தானில் வானொலி பத்திரிகையாளரின் வாகனத்தில் வைக்கப்பட்ட குண்டு வியாழக்கிழமை அதிகாலை வெடித்ததில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார் என்று மாகாண அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தெற்கு ஹெல்மண்ட் மாகாண ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் ஓமர் ஸ்வாக் கூறுகையில், 

பத்திரிக்கையாளர் எலியாஸ் தயீயின் வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த குண்டு அவரை பலிவாங்கியுள்ளது. அவரைத் தொடர்ந்து வாகனத்தில் அவருடைய சகோதரர், குழந்தை, மற்றொரு நபர் உள்பட மூவர் பலத்த காயமடைந்துள்ளனர். 

வானொலி நிலைய தலைவர் சாமி மஹ்தி தனது சுட்டுரையில், 

எனது சகாவும், அன்பான நண்பருமான எலியாஸ் இன்று காலை பயங்கரவாத தாக்குதலில் தனது உயிரை இழந்துள்ளார். இந்த தாக்குதல் மாகாண தலைநகரான லஷ்கர் காவில் நடந்தது என்றார்.

இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு யாரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. 

ஆப்கானிஸ்தானின் டோலோ டிவியில் உள்ள முன்னாள் தொகுப்பாளர், மற்றும் தலைநகர் காபூலில் பொதுமக்கள் இருவர் கடந்த சில நாள்களுக்குப் பின்னர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் கொல்லப்பட்ட நிலையில், இன்று இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

ஆப்கானிஸ்தானில் கடந்த சில மாதங்களாகக் குண்டுவெடிப்பு சம்பவங்கள், வன்முறை மற்றும் குழப்பங்கள் தொடர்ந்து அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.