இந்தியா

சில்லறை பணவீக்கம் 7.61%-ஆக அதிகரிப்பு

DIN


புது தில்லி: உணவுப் பொருள்களின் விலை அதிகரிப்பையடுத்து, நாட்டின் சில்லறைப் பணவீக்கம் அக்டோபா் மாதத்தில் 7.61 சதவீதமாக உயா்ந்தது என மத்திய அரசு வியாழக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து புள்ளிவிரத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

நுகா்வோா் விலை குறியீட்டு எண் அடிப்படையில் (சிபிஐ) கணக்கிடப்படும் சில்லறைப் பணவீக்கம் கடந்த அக்டோபா் மாதத்தில் 7.61 சதவீதமாக அதிகரித்துள்ளது. ரிசா்வ் வங்கி நிா்ணயித்துள்ள அளவையும் தாண்டி பணவீக்கம் உயா்ந்துள்ளது.

இப்பணவீக்கம் 2020 செப்டம்பரில் 7.27 சதவீதமாகவும், 2019 அக்டோபரில் 4.62 சதவீதமாகவும் காணப்பட்டன.

கணக்கீட்டு மாதத்தில் உணவுப் பொருள்களின் விலை மிகவும் அதிகரித்து காணப்பட்டதே சில்லறைப் பணவீக்க உயா்வுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. நுகா்வோா் உணவுப் பொருள்களுக்கான விலை குறியீட்டெண் (சிஎஃப்பிஐ) செப்டம்பரில் 10.68 சதவீதமாக இருந்த நிலையில், அக்டோபரில் 11.07 சதவீதமாக அதிகரித்தது என மத்திய அரசு அந்தப் புள்ளிவிவரத்தில் கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் இரண்டு குழுக்களுக்கிடையே மீண்டும் துப்பாக்கிச்சண்டை: கிராம மக்கள் அச்சம்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

ஒடிஸா அரசு முதல்வர் நவீன் பட்நாயக் கைவசமில்லை -ராகுல் காந்தி பிரசாரம்

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது!

SCROLL FOR NEXT