முகப்பு
இந்தியா

கரோனாவிலிருந்து குணமடைந்தார் ஸ்மிருதி இரானி

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தொற்றிலிருந்து குணமடைந்தார்.

Updated On : 12 நவம்பர், 2020 at 11:06 AM
மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாடு மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி (கோப்புப்படம்)
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:21 PM

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தொற்றிலிருந்து குணமடைந்தார்.

கரோனாவிலிருந்து குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்த அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாடு மற்றும் ஜவுளித்துறை அமைச்சரான ஸ்மிருதி இரானி கடந்த மாதம் 28-ஆம் தேதி கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார். 

Advertisement

பிகார் தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அவர், தம்மை நேரில் சந்தித்த அனைவரும் கரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று சுட்டுரையில் அறிவுறுத்தியிருந்தார்.

இந்தநிலையில் தற்போது அவர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இது குறித்து சுட்டுரையில் பதிவிட்டுள்ள அவர், ''கரோனா பரிசோதனையில் 'நெகடிவ்' என வந்துள்ளது. கரோனா தொற்றிலிருந்து குணமடைய வேண்டும் என்று வாழ்த்திய மற்றும் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.