முகப்பு
இந்தியா

உத்தரகண்ட் பாஜக எம்.எல்.ஏ. கரோனாவிற்கு பலி

உத்தரகண்டில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.  சுரேந்திர சிங் காலமானார்

Updated On : 12 நவம்பர், 2020 at 12:03 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:21 PM

உத்தரகண்டில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

உத்தரகண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தின் சட்ல் தொகுதி எம்.எல்.ஏவான சுரேந்திர சிங் (50) கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

தில்லி சர் கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், இன்று அதிகாலை 4 மணியளவில் உயிரிழந்தார். பாஜக மாநிலத் துணைத் தலைவர் தேவேந்திர பாசின் இதனை உறுதிப்படுத்தினார்.

Advertisement

சுரேந்திர சிங்கின் மரணம் கட்சிக்கு மட்டுமல்லாமல் சமூகத்திற்கும் மிகப்பெரிய இழப்பு என்று தேவேந்திர சிங் பாசின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு சுரேந்திர சிங்கின் மனைவியும் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.