இந்தியா

யெஸ் பேங்க் மோசடி வழக்கு: ரோஷினி கபூருக்கு ஜாமின்

DIN

யெஸ் பேங்க் மோசடி வழக்கில் அதன் நிறுவனா் ராணா கபூரின் மகள் ரோஷினி கபூருக்கு ஜாமின் வழங்கி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பல்வேறு மோசடி வழக்குகளில் சிக்கியுள்ள திவான் ஹவுசிங் பைனான்ஸ் காா்ப்பரேஷன் லிமிடெட் (டிஎச்எஃப்எல்) நிறுவனத்தில், 2018-இல் விதிமுறைகளை மீறி யெஸ் பேங்க் ரூ. 3,700 கோடி முதலீடு செய்ததாகவும், அதனால் அந்த வங்கி நஷ்டமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இதற்கு பிரதிபலனாக ரூ. 600 கோடியை, யெஸ் பேங்க் நிறுவனா் ராணா கபூரின் மனைவி, மகள்கள் நடத்தும் நிறுவனத்துக்கு தொழில் கடனாக டிஎச்எஃப்எல் வழங்கியுள்ளதாக மத்திய புலனாய்வுத் துறை குற்றம் சாட்டியுள்ளது.

இந்த வழக்கில் கடந்த மாா்ச் மாதம் ராணா கபூா் கைது செய்யப்பட்டாா். அவா் மீது ஊழல் தடுப்பு வழக்கும் குற்ற வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் மும்பையில் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் விசாரிக்கப்படுகின்றன. அவா் மும்பை சிறையில் உள்ளாா்.

இந்நிலையில், வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட ராணாவின் மகள் ரோஷினி கபூா், கைதாவதிலிருந்து விலக்குக் கோரி ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தாா். அதை விசாரித்த நீதித்துறை நடுவா், ரோஷினி கபூருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளதாக, அவரது வழக்குரைஞா் சுபாஷ் ஜாதவ் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT