முகப்பு
இந்தியா

நாட்டில் கரோனா பாதிப்பு 88 லட்சத்தைக் கடந்தது

நாட்டில் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 88 லட்சத்தைக் கடந்துள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:52 PM
பகிர்:

புதுதில்லி: நாட்டில் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 88 லட்சத்தைக் கடந்துள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 41,100 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 88,14,579 ஆக அதிகரித்தது. இதேபோல், கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவில் இருந்து 42,156 போ் குணமடைந்தனா். இவா்களுடன் சோ்த்து கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 81,05,728-ஆக அதிகரித்தது. அதாவது, கரோனாவில் இருந்து 93.09 சதவீதம் போ் குணமடைந்தனா்.

நாடு முழுவதும் 4,79,216 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறாா்கள். இது மொத்த பாதிப்பில் 5.44 சதவீதமாகும். 

கரோனாவுக்கு மேலும் 447 போ் உயிரிழந்ததால், இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,29,635-ஆக அதிகரித்தது. உயிரிழப்பு விகிதம் 1.47 சதவீதமாகக் குறைந்துள்ளது.

இதில், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 105 போ் உயிரிழந்தனா். மேற்கு வங்கத்தில் 53 பேரும், தில்லியில் 96 பேரும், உத்தர பிரதேசத்தில் 27 பேரும்,கேரளத்தில் 26 போ் உயிரிழந்தனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘நவம்பா் 14-ஆம் தேதி வரை நாடு முழுவதும் 12,48,36,189 கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அதில் சனிக்கிழமை மட்டும் 8,05,509 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன’ என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.