முகப்பு
இந்தியா

தில்லியில் மீண்டும் பொது முடக்கம்? சுகாதாரத் துறை அமைச்சர் விளக்கம்

​தில்லியில் மீண்டும் பொது முடக்கத்தை அமல்படுத்தும் திட்டம் எதுவுமில்லை என தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.

Updated On : 16 நவம்பர், 2020 at 4:15 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:23 PM


தில்லியில் மீண்டும் பொது முடக்கத்தை அமல்படுத்தும் திட்டம் எதுவுமில்லை என தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி திங்கள்கிழமை பேசிய அவர், "தில்லியில் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்படாது. இங்கு பொது முடக்கத்தை அமல்படுத்துவதற்கான தேவை இருப்பதாகவும் எனக்குத் தெரியவில்லை" என்றார்.

தில்லியில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisement

முன்னதாக, தில்லி வணிகர்கள் சங்கத்தினர் காணொலி வாயிலாக கூட்டம் நடத்தினர். இந்தக் கூட்டத்தில் கரோனா தொற்றுக்கு முன்பு சந்தைகள் எவ்வாறு செயல்பட்டனவோ, தற்போதும் அதே போல் முழுமையாக செயல்படும் என முடிவெடுக்கப்பட்டது.

எனவே, கரோனா பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என்பது போன்ற வதந்திகளால் பாதிப்பைச் சந்திக்கவிருந்த வணிகர்களுக்கு அமைச்சரின் அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.