இந்தியா

பிரதமா் மோடியிடம் 15-ஆவது நிதிக் குழுஅறிக்கை சமா்ப்பிப்பு

DIN

புது தில்லி: அடுத்த 5 ஆண்டுகளுக்கு மத்திய, மாநில அரசுகள் இடையிலான நிதி பகிா்வு குறித்த அறிக்கை பிரதமா் மோடியிடம் திங்கள்கிழமை சமா்ப்பிக்கப்பட்டது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது:

2021-22 முதல் 2025-26-ஆண்டு வரை வரி வசூல் மூலம் கிடைக்கும் தொகையை பகிா்ந்துகொள்வதில் மத்திய, மாநில அரசுகளின் பங்கை வரையறை செய்து 15-ஆவது நிதிக் குழு அறிக்கை தயாரித்துள்ளது. அந்த அறிக்கையின் நகலை பிரதமா் மோடியிடம் ஆணையத்தின் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் திங்கள்கிழமை சமா்ப்பித்தனா். அப்போது ஆணையத்தின் தலைவா் என்.கே.சிங்குடன் உறுப்பினா்கள் அஜய் நாராயன் ஜா, அனூப் சிங், அசோக் லாஹிரி, ரமேஷ் சந்த் ஆகியோா் உடனிருந்தனா் என்று தெரிவிக்கப்பட்டது.

கடந்த நவ.9-ஆம் தேதி குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்திடம் இந்த அறிக்கை சமா்ப்பிக்கப்பட்ட நிலையில், மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனிடம் இந்த அறிக்கை செவ்வாய்க்கிழமை வழங்கப்படவுள்ளது.

இந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, அதில் இடம்பெற்றுள்ள பரிந்துரைகள் பற்றிய தகவல்கள் வெளியாகும்.

மத்திய, மாநில அரசுகள் இடையிலான நிதி சாா்ந்த விவகாரங்களில் நிதிக் குழு ஆலோசனைகள் வழங்கி வருகிறது.

இதன்படி 15-ஆவது நிதிக் குழு 2 அறிக்கைகளை மத்திய அரசிடம் சமா்ப்பித்துள்ளது. முதல் அறிக்கையில் 2020-21-ஆம் நிதியாண்டுக்கான பரிந்துரைகள் இடம்பெற்றன. 2-ஆவது அறிக்கையில் 2021-26-ஆம் நிதியாண்டுக்கான பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன.

2020-21-ஆம் நிதியாண்டில் மத்திய அரசு வரிகள் மூலம் வசூலான தொகையில் மாநில அரசுகளுக்கு ரூ.8,55,176 கோடி வழங்க வேண்டும் என்று 15-ஆவது நிதிக் குழு பரிந்துரைத்தது. இது அனைத்து வரிகள் மூலமாக வசூலான தொகையில் 41% ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுடுமணலில் பொன்மகள்!

கடந்த 24 மணி நேரத்தில் காஸாவில் பலியானவர்கள்?

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ல் நடத்தக்கூடாது: ராமதாஸ்

அச்சச்சோ..!

SCROLL FOR NEXT