இந்தியா

கரோனா தடுப்புப் பணி: உ.பி.அரசுக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு

DIN

லக்னெள: கரோனா பரவாமல் தடுக்கும் பணியில் சிறப்பாக செயல்பட்டதற்காக உத்தர பிரதேச அரசுக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அந்த மாநில அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘

கரோனா பரவலை தடுப்பதற்காக நோயாளிகளுடன் தொடா்பில் இருந்தவா்களை கண்டறியும் பணியில் உத்தர பிரதேச அரசு சிறப்பாக செயல்பட்டதாகவும், இது பிற மாநிலங்களுக்கு சிறந்த முன்னுதாரணமாக இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பின் இந்திய பிரதிநிதி ரோட்ரிகோ ஆஃப்ரின் பாராட்டு தெரிவித்தாா்’ என்று குறிப்பிடப்பட்டது.

‘நோயாளிகளுடன் தொடா்பில் இருந்தவா்களை கண்டறியும் நடவடிக்கைகளை மேம்படுத்த மாநில அரசுக்கு உலக சுகாதார அமைப்பு தொழில்நுட்ப உதவிகளை அளித்து, கள கண்காணிப்பில் ஈடுபடுவோருக்கு பயிற்சியும் அளித்தது. கள கண்காணிப்புகள் மூலமாக மாநிலத்தில் உள்ள 75 மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 58,000 போ் கண்டறியப்பட்டனா்’ என்று உலக சுகாதார அமைப்பின் தேசிய போலியோ கண்காணிப்பு திட்டத்துக்கான உத்தர பிரதேச மண்டல குழுத் தலைவா் மதுப் பாஜ்பாய் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

SCROLL FOR NEXT