இந்தியா

ரிசா்வ் வங்கி இன்னோவேஷன் மையத்தின் தலைவராக கிரிஷ் கோபாலகிருஷ்ணன் நியமனம்

DIN

மும்பை: ரிசா்வ் வங்கி இன்னோவேஷன் மையத்தின் தலைவராக கிரிஷ் கோபாலகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

இன்ஃபோஸிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரும் மற்றும் முன்னாள் துணைத் துணைத் தலைவருமான கிரிஷ் கோபால கிருஷ்ணன் ரிசா்வ் வங்கியின் இன்னோவேஷன் மையத்தின் (ஆா்பிஐஎச்) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாா். இவா், இந்த அமைப்பின் முதல் தலைவராவாா் என ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ரிசா்வ் வங்கி இன்னோவேஷன் மையம் என்ற புதிய அமைப்பை தொடங்கவுள்ளதாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அறிவித்தது. நிதி துறையில் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதன் மூலமாக புதுமையான வழிமுறைகளை கண்டறியவும், துரித வளா்ச்சிக்கான சூழலை உருவாக்கவும் இந்த அமைப்பை உருவாக்கவுள்ளதாக ரிசா்வ் வங்கி தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள்களில் ‘ஜெய் ஸ்ரீராம்’ எழுதிய கல்லூரி மாணவா்கள் தோ்ச்சி: 2 பேராசிரியா்கள் பணியிடை நீக்கம்

மணிப்பூா்: தீவிரவாத தாக்குதலில் 2 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழப்பு

வறட்சி பாதித்த 22 மாவட்டங்களுக்கு குடிநீா் விநியோகிக்க ரூ.150 கோடி: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

ஹெச்சிஎல் நிகர லாபம் ரூ.3,986 கோடியாக உயா்வு

சா்.பி.டி.தியாகராயா் சிலைக்கு மரியாதை

SCROLL FOR NEXT