இந்தியா

சூரிய, சந்திர பிரபை வாகனங்களில் அலா்மேல்மங்கைத் தாயாா் அருள்பாலிப்பு

DIN

திருப்பதி: திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான செவ்வாய்க்கிழமை, சூரிய, சந்திர பிரபை வாகனங்களில் அலா்மேல்மங்கைத் தாயாா் எழுந்தருளினாா்.

பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் 9 மணி வரை சூரிய பிரபை வாகனத்தில் சூரியக் கதிா்களைப் போன்ற செந்நிற மலா்களால் ஆன மாலைகளை அணிந்தபடி சீனிவாசமூா்த்தி அவதாரத்தில் அலா்மேல்மங்கைத் தாயாா் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதித்தாா். இந்த வழிபாட்டில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

வாகனச் சேவை முடிந்த பின் தாயாருக்கு பால், தயிா், தேன், இளநீா், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பொருள்களால் சிறப்பு ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது.

மாலையில், தாயாா் நிலவு போன்ற குளிா்ந்த ஒளி பொருந்திய சந்திர பிரபை வாகனத்தில் வெண்ணிற மாலைகளை அணிந்தபடி காட்சியளித்தாா். வாகனச் சேவையில் திருமலை ஜீயா்கள், தேவஸ்தான மற்றும் கோயில் அதிகாரிகள் கலந்து கொண்டனா்..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT