முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 5,011 பேருக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் இன்று (புதன்கிழமை) 5,011 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 18 நவம்பர், 2020 at 8:35 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:24 PM


மகாராஷ்டிரத்தில் இன்று (புதன்கிழமை) 5,011 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரம்:

புதிதாக 5,011 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 17,57,520 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 6,608 பேர் குணமடைந்துள்ளனர், 100 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 16,30,111 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மொத்தம் 46,202 பேர் பலியாகியுள்ளனர். கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 80,221 பேர் இன்னும் கரோனாவுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement

தாராவி:

ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தாராவியில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 3,626 ஆக உயர்ந்துள்ளது. இதில் 3,307 பேர் ஏற்கெனவே குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் வெறும் 8 பேர் மட்டுமே இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.