இந்தியா

'ஃபைசர் தடுப்பூசியில் தீவிரமான பக்கவிளைவுகள் இல்லை'

DIN


ஃபைசர் மற்றும் ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசியில் 95 சதவிகிதம் பயன்திறன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் இடைக்கால முடிவுகளின் 2-ம் கட்ட முடிவை வெளியிட்டுள்ளன. 2 முறை செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசியில் 95 சதவிகிதம் பயன்திறன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி வயது மூத்தவர்கள் கரோனா தொற்றுக்கு ஆளாகாமல் இருப்பதையும் பாதுகாப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தீவிரமான பக்கவிளைவுகள் எதுவும் தென்படவில்லை என்று தெரிவித்துள்ள நிறுவனம், பெரும்பாலும் சோர்வாக இருப்பதாக மட்டுமே புகார் வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. தன்னார்வலர்களில் 4 சதவிகிதத்தினருக்கு மட்டுமே இந்த பாதிப்பு இருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்மூலம், அவசரப் பயன்பாட்டுக்கான அமெரிக்க ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் விரைவில் ஒப்புதல் கோரவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT