இந்தியா

உத்தரகண்டில் கல்லூரிகளைத் திறப்பது ஒத்திவைப்பு

DIN

உத்தரகண்டில் அதிகரித்து வரும் கரோனா தொற்று காரணமாக கல்லூரிகள் திறக்கப்படுவது தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

கரோனா தொற்று பரவலின் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. நீண்ட இடைவெளிக்குப் பின் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி மாநில தொற்று பாதிப்பு நிலைகளுக்கேற்ப கல்வி நிலையங்களைத் திறப்பதற்கான அறிவிப்பை மாநில அரசுகள் வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில் உத்தரகண்ட் மாநிலத்தில் தீபாவளி பண்டிகைக்குப் பின் கல்லூரிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பின் காரணமாக கல்லூரிகள் திறப்பு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று நிலைகளுக்கேறப டிசம்பர் மாத தொடக்கத்தில் கல்லூரிகள் திறக்கப்படலாம் என மாநில அமைச்சர் மதன் கெளசிக் வியாழக்கிழமை தெரிவித்தார்.

உத்தரகண்டில் இதுவரை 69 ஆயிரத்து 307 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் ரத்னம் எப்போது?

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

ஓ மை ரித்திகா!

பதவியை தக்கவைக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்: கார்கே

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT