இந்தியா

ஆமதாபாத்தில் மட்டும் முழு ஊரடங்கு: குஜராத் முதல்வர்

DIN


குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால், அந்நகரில் மட்டும் 57 மணிநேர முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதுமான முழு ஊரடங்கை அரசு திணிக்காது என்று முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய முதல்வர் விஜய் ரூபானி, ''குஜராத்தின் வணிக மையமான ஆமதாபாத்தில் கரோனா தொற்று அதிகரிப்பதைத் தடுக்கும் வகையில் வெள்ளிக்கிழமை முதல் வார இறுதி முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ஆமதாபாத் நகரில் மட்டும் வார இறுதி நாள்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்க முடிவு செய்துள்ளோம்'' என்று கூறினார்.

முழு ஊரடங்கை மீறி முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் வருபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஆமதாபாத்தில் வார இறுதி முழு ஊரடங்கு உத்தரவு இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 9 மணி முதல் திங்கள்கிழமை காலை 6 மணிவரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆமதாபாத்தில் இயக்கப்பட்டு வந்த 600 பேருந்துகளும் இயக்கப்படாது என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT