இந்தியா

கரோனா: நாட்டில் அதிகபட்சமாக ஒரேநாளில் 10.75 லட்சம் மாதிரிகள் பரிசோதனை

DIN

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரேநாளில் 10,75,326 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல் தெரிவித்துள்ளது.

நாட்டில் கரோனா பரவல் தொடங்கிய கடந்த மார்ச் மாதம் முதல் பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 10,75,326 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இது ஒருநாளில் அதிகபட்ச கரோனா பரிசோதனை ஆகும். மொத்தமாக இன்று (நவ.21) வரை நாடு முழுவதும் 13,17,33,134 கோடி கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இத்தகவலை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பரிசோதிக்கப்பட்டதில், புதிதாக 42,779 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால், மொத்த பாதிப்பு 90,93,376 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் மேலும் 501 பேர் உள்பட 1,33,227 பேர் கரோனாவுக்கு உயிரிழந்தனர். 

இதுவரை கரோனாவிலிருந்து 85,21,617 பேர் குணமடைந்தனர். தற்போது 4,40,962 போ் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT