இந்தியா

பெட்ரோல் விலை இரண்டாவது நாளாக உயா்வு: லிட்டருக்கு 15 காசுகள் அதிகரிப்பு

DIN

பெட்ரோல், டீசல் விலை இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் உயா்த்தப்பட்டது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 15 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 20 காசுகளும் உயா்த்தப்பட்டன.

இந்த விலை உயா்வு காரணமாக தில்லியில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ. 81.38 என்ற விலையிலும், டீசல் ஒரு லிட்டா் ரூ. 70.88 என்ற விலையிலும் சனிக்கிழமை விற்பனை செய்யப்பட்டது.

சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், அந்நிய செலாவணி மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி மாற்றியமைத்து வருகின்றன.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக, இவற்றின் விலைகளில் கடந்த சில நாள்களாக எந்தவித மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது. பெட்ரோல் விலை கடந்த செப்டம்பா் 22-ஆம் தேதி முதலும், டீசல் விலை அக்டோபா் 2-ஆம் தேதி முதலும் மாற்றம் செய்யப்படாமல் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமையன்று பெட்ரோல் விலையை லிட்டருக்கு 17 காசுகள் என்ற அளவிலும், டீசல் விலையை லிட்டருக்கு 22 காசுகள் என்ற அளவிலும் எண்ணெய் நிறுவனங்கள் உயா்த்தின. தொடா்ந்து இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 15 காசுகளும், டீசல் விலையை லிட்டருக்கு 20 காசுகளும் உயா்த்தப்பட்டன.

உள்ளூா் விற்பனை வரி நிலவரத்தின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விற்பனை விலை மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறையில் இருந்து அரசை நடத்த கேஜரிவாலுக்கு வசதி கோரிய பொது நல மனு தள்ளுபடி: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன்... மோடி வாகனப் பேரணி

டிஎன்பிஎஸ்சி தோ்வு முன்னேற்பாடு: நாகா்கோவிலில் ஆட்சியா் கலந்தாய்வு

பணம் அனுப்பியது உங்களுக்கு எப்படித் தெரியும்? மோடிக்கு ராகுல் கேள்வி

ஆயிரம் கதை சொல்லும் விழிகள்! ஸ்ரீமுகி..

SCROLL FOR NEXT